0208 905-0452
Little Aid
x

News/ Projects

July 2009 – Acknowledgement letter for the Little Aid – Book project (IDP camps)
Jul 30, 2009

திருவாளர் கொன்ஸ்ரன் ரைஸ்
தலைவர்
லிட்டில் எய்ட்

ஐக்கிய இராச்சியம்

ஐயா!

வணக்கம்

நன்றி கூறல்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரிநிலையங்களில் தங்கி கல்வி பயிலும் தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்டம் தேசம்நெற் இணைந்து முன்னெடுத்து செல்லும் கல்வி நிவாரண செயற்றிட்டத்திற்கு தங்கள் அமைப்பினால் தரப்பட்ட 1000 பவுன் நிதியுதவிக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது வேலைத்திட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. 4872 மாணவர்களுக்கான 30 மாதிரி வினாத்தாள்கள்,  04 வழிகாட்டி செயல் நூல்கள் வழங்கும் பணியில் கடைசி கட்டத்தில் தற்போது இருக்கின்றோம். இந்த வேலைத்திட்டம் பூர்த்தியடைந்ததும் முழுமையான கணக்கு விபரத்தினையும்,  எமது செயற்பாட்டறிக்கையையும் தங்களுக்கு சமர்ப்பிப்போம்.

எதிர்வரும் காலத்தில் கா.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான செயற்றிட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கும் தங்கள் நிறுவன உதவியை எதிர்பார்த்து நிற்கின்றோம். சேம்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கவுள்ள மேற்படி செயற்றிட்டம் தொடர்பான செயற்றிட்ட அறிக்கையை தங்களுக்கு விரைவில் சமர்ப்பிப்போம்.

மிக்கநன்றி

தங்கள் விசுவாசமுள்ள

கலாபூஷணம் புன்னியாமீன்
முகாமைத்துவப் பணிப்பாளர்
சிந்தனைவட்டம்

பிரதி பிரதம ஆசிரியர் தேசம்நெற்

Comments

Respond