லிற்றில் எய்ட் இலங்கை அறங்காவல்சபை உறுப்பினர்கள்:

சின்னத்தம்பி இதயராஜா (தலைவர்)

சின்னத்தம்பி இதயராஜா கிளிநொச்சியை வதிவிடமாகக் கொண்டவர். எமது நிறுவனத்தின் அறங்காவலர் சபையின் தலைவர்.
கல்வித்தகைமை இலங்கை கல்வி நிர்வாக சேவை பயிற்றப்பட்ட கலைப்பட்டதாரி..
தொழில்தகைமை – ஆசிரியராகவும், ஆசிரியகலாசாலை விரிவுரையாளராகவும், மத்திய கல்வி அமைச்சிலும், கிளிநொச்சி வலயக்கல்விப் பணிமனையிலுமாக 38 வருடங்கள் சேவையாற்றியுள்ளார். இவர் ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சின் இந்துசமய ஆலோசனைச் சபையின் செயலாளராகவும், கல்வி அமைச்சின் பாடநூல் குழுவின் எழுத்தாளராகவம், மோகனதாஸ் சனசமூக நிலைய காப்பாளர் சபைச் செயலாளராக
வும் இருக்கின்றார். சமூக சேவை நிறுவனமான மக்கள் மன்றத்தினால் வழங்கப்பட்ட  தேசகீர்த்தி விருதும் இவர் பெற்றுள்ளார்.
பரராசசிங்கம் தயாளன்  (செயலாளர்)
பரராசசிங்கம் தயாளன்  பரந்தனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார். நிறுவனத்தின் அறங்காவலர் சபையின் செயலாளர்.
கல்வி தகைமை யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பட்டதாரி, தமிழ் முதுகலைமாணி கல்வியியல் முதுமாணி பட்டங்களையும் பெற்றவர்.
தொழில் ்தகைமை அரச பாடசாலை ஆசிரியராக கடமையாற்றுகின்றார்.  கிளிநொச்சி மக்கள் சிந்தனைக்களத்தின் உறுப்பினராக செயற்பட்டு வருகிறார்.

அரிமர்த்தனா கணேசன் (துணைச் செயலாளர்)செல்வி   அரிமர்த்த்னா கணேசன் கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகக்கொண்டுள்ளார். நிறுவனத்தின் அறங்காவல்சபையின் உதவிச் செயலாளர்.

கல்வி தகைமை. களனி பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடத்தின் ‘சூழல் பேணலும் முகாமைத்துவமும்’ கற்கை நெறியில் பட்டப்படிப்பை தொடர்கிறார். சமூக செயற்பாட்டாளரான இவர் கிளிநொ்ச்சி ஐயைகள் சமூக செயற்பாட்டு குழுமத்தில் இணைந்து செயற்பட்டு வருகிறார்.

திரு மார்க்கண்டு குகன் – பொருளாளர் மார்க்கண்டு குகன் நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் பொருளாளராக உள்ளார். இவர் ஒரு சமூக செயற்பாட்டாளராக முழுமை நேரம் இயங்கி வருகிறார். பல ஆன்மீக அமைப்புக்களில் இணைந்து சமூக தொண்டு செய்து வருகிறார்.

திரு நல்லையா கிருஷ்ணன்
திரு நல்லையா கிருஷ்ணன் ஜயசுந்தர கிளிநொச்சியை வதிவிடமாகக் கொண்டவர்.  எமது நிறுவனத்தின் உறுப்பினராக உள்ளார்.
க.பொ.த உயர்தரம் வரை சிங்கள மொழியில் கற்றுள்ளார்.  வியாபாரத்தை தனது தொழிலாகக் கொண்டுள்ளார்.
கிளிநொச்சி நகர  ரொட்டரி கழகத்தின் 2021/2022 தலைவராக உள்ளார். கரைச்சி மத்தியஸ்தர் சபை உறுப்பினர், கிளிநொச்சி சக்குரா சோட்டோகான் கராத்தே கழகத்தின் மாவட்ட செயலாளராகவும் செயற்படுகின்றார். கிளிநொச்சி மாவட்ட வணிக கைத்தொழில் வேளாண் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினராகவும் அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் சாமஸ்ரீ தேசமான்ய விருது பெற்றுள்ளார்.
X