கிளிநொச்சி மாவட்டத்தின் திருநகர் பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இலவச தொழில் கல்வி நிறுவனமாக இயங்கி வருகிறது லிட்டில் எய்ட் எனும் தொழில் கல்வி திறன் விருத்தி மையம். இந்த நிலையில் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தின் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்த வகையிலும் – குறித்த கல்வி நிறுவனத்தில் தொழில் கல்வி பயிலும் மாணவர்களின் கைவினைப் பொருட்களை உள்ளடக்கிய வகையில் உள்ளூர்க் கைத்தொழில் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கண்காட்சியும் – மலிவு விற்பனையும் எதிர்வரும் 06.08.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும் குறித்த கண்காட்சியும் – மலிவு விற்பனை சந்தையும் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. குறித்த அதே நாளில் கிளிநொச்சி மாவட்டத்தின் சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் – அவர்கள் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்ட “லிட்டில் பேர்ட்” என்ற சஞ்சிகையும் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

X