லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் கல்வி கற்றுவரும் பிரிவு LA/2023/A மாணவர்களுக்கான பால்நிலை சமத்துவம் தொடர்பான பயிற்சி பட்டறை ஒன்று 07.08.2023 அன்று லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த பயிற்சிப்பட்டறையை சட்டத்திற்கும் மனித உரிமைகளுக்குமான நிறுவனம்(law and human rights centre) நடாத்தியிருந்து. குறித்த பயிற்சி பட்டறை நமது திறன் விருத்தி மையத்தின் மாணவர்களுக்கு ஆண் – பெண் சமத்துவம் தொடர்பான அடிப்படை விளக்கம் , ஆண் – பெண் தொடர்பான சமத்துவமற்ற சமூகத்தின் உடைய பார்வை , பெண்கள் அடக்கப்படுதல் , ஆணாதிக்க சிந்தனையின் தாக்கம் , பால்நிலை சமத்துவமுடைய சமூகம் ஒன்றினுடைய தேவை போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் கலந்துரையாடல்கள் மூலமும் – செயற்பாடுகள் மூலமும் மாணவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
குறித்த செயலமர்வை ஆக்கப்பூர்வமான வகையில் நடாத்தி – மாணவர்களுக்கான மதிய உணவு மற்றும் சிற்றுண்டி ஏற்பாடுகள் என்பவற்றையும் வழங்கிய law and Human rights centre நிறுவனத்துக்கும் – அதன் விரிவுரையாளர்களுக்கும் நமது திறன் விருத்தி மையத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.