கிளிநொச்சி மாவட்டம் திருநகர் பகுதியில் இயங்கி வரும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையமானது லிட்டில் நூலகம் எனும் நூலக செயற்றிடத்தையும் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் லிட்டில் நூலகம் செயற்திட்டத்துக்காக யாழ்ப்பாணம் சுன்னாகம் பொதுநூலகத்தினரால் பெறுமதியான 100 புத்தகங்கள் கடந்த 17.06.2023 அன்று அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது.

நமது வாசிப்பு செயற்றிட்டத்துக்கு நூல்களை அன்பளிப்பு செய்தமைக்காக சுன்னாகம் பொது நூலக நிர்வாகத்தினருக்கு லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

X