லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் நடப்பு ஆண்டில் 130 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். மாணவர்கள் வகுப்புக்கள் தினசரி முடிவடைந்ததன் பின்னர் திறன் விருத்தி மையத்தின் வளாகத்தில் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் குறைந்த அளவிலான விளையாட்டு உபகரணங்கள் எம்மிடம் காணப்படுவதால் மாணவர்கள் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு செயற்பாடுகளில் ஈடுபடுவது சிரமமானதாக காணப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அண்மையில் நமது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்திற்கு இங்கிலாந்தில் இருந்து வருகை தந்திருந்த அகிசன் அருள்மோகன் குடும்பத்தினர் நமது நிறுவனத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் விளையாட்டு தேவைகளுக்காக பெருமதியான விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான ஒரு தொகை நிதி அன்பளிப்பை வழங்கி இருந்தனர். குறித்த நிதி அன்பளிப்பினை கொண்டு மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.

அகிசன் அருள்மோகன் குடும்பத்தினருக்கு திறன் விருத்தி மையத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

X