லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 19.08.2023 அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
2022 மற்றும் 2023 ஆகிய வருடங்களில் தொழில் திறன் விருத்தி கல்வியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது.
குறித்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஸ்தாபகர் திரு.த.ஜெயபாலன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளதுடன் குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ள அதேநேரம் குறித்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாளில் கிளிநொச்சி மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்களை உள்ளடக்கிய கையேடு ஒன்றும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் வெளியிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.