
லிட்டில் டெக் அக்கடமியின் முன்னாள் பணிப்பாளரும் சமூக ஆளுமையுமான அமரர் வ.சிவஜோதி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு லிட்டில் டெக் அக்கடமியின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் ஞாபகார்த்த நிகழ்வு நாளைய தினம் (23.11.2024) காலை 9.45 மணிக்கு கிளிநொச்சி, திருநகர், கனகராசா வீதியில் அமைந்துள்ள லிட்டில் டெக் அக்கடமி வளாகத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வில் சமூக மாற்றத்திற்காக இயங்கி கொண்டிருக்கும் ஓர் சமூக ஆளுமை கௌரவிக்கப்பட்டு அவருக்கான “சிவஜோதி ஞாபகார்த்த விருது” வழங்கப்பட்டு ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான பணப்பரிசிலும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கல்விப்பணி மூலம் சமூக மாற்றத்திற்காக இயங்கி வரும் கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம் பாடசாலை அதிபர் திருமதி ஜெயா மாணிக்கவாசகனுக்கு அவருடைய பாடசாலை சார்ந்த முன்னேற்ற செயற்பாடுகளுக்காக சிவஜோதி ஞாபகார்த்த விருதுடன் ஒன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான பணப்பரிசிலும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

