லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த மாணவர் கைவினைப் பொருட்கள் கண்காட்சியும் – லிட்டில் பேர்ட் சஞ்சிகை வெளியடும் 03.08.2024 அன்று லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையம் அமைந்துள்ள கல்வி பண்பாட்டு மற்ற மண்டபத்தில் காலை 10. மணி அளவில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வுகளுக்கு லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஸ்தாபகர் தம்பிராஜா ஜெயபாலன் தலைமையேற்று நடாத்தியிருந்தார்.

குறித்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக சிறுகைத்தொழில்கள் தொடர்பான வளவாளரும் – சுயதொழில் முயற்சியாளருமான திருமதி அன்ரனிபாலா மரியபிரசாந்தினி , கிளிநொச்சி மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபை உதவிப் பணிப்பாளர் திரு.ச.சடாட்சரன் , கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.ஆர்.மோகனதாஸ், முன்னாள் இலங்கைக்கான வெளிநாட்டு இராஜப்பிரதிநிதி ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம், லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஜேர்மன் கிளை உறுப்பினர்களான திரு.சுப்பிரமணியம் உதயன், திருமதி கங்கா ஜெயபாலன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வுகள் மங்களவிளக்கேற்றல், மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பித்திருந்த நிலையில் தலைமையுரையை வழங்கிய திரு. தம்பிராஜா ஜெயபாலன் “அண்மை காலங்களில் நாம் நமது உள்ளூர் கைத்தொழில் துறையை கவனிக்காது விட்டமை தொடர்பிலும் அதனை மேம்படுத்துவதற்கான சிறு முயற்சியை லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையம் தன் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மூலமாக வழங்குவதாகவும் – உலகின் ஆகச்சிறப்பின தற்சார்பு வாழ்வியலை கொண்ட நாம் இன்று அனைத்திற்கும் இறக்குமதியை எதிர்பார்த்து நிற்பதாகவும் விசனம் வெளியிட்ட தம்பிராஜா ஜெயபாலன் உள்ளூர் உற்பத்திகளை நாம் நுகர ஆரம்பிக்கும் போது தான் எம்மிடையே சிறப்பான பொருளாதார கட்டமைப்பு ஒன்று உருவாகும் எனவும் நாமே நமது உள்ளூரா உற்பத்திகளை கொண்டாடவும் – நுகர்வும் மறுக்கும் போது அதனை யார் கொள்வனவு செய்வர் என தனது கருத்தை பதிவு செய்தார்.”

அவருடைய உரையை அடுத்து சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்த திருமதி அன்ரனிபாலா மரியபிரசாந்தினியின் சிறப்பு விருந்தினர் உரை இடம்பெற்றது. தொடர்ந்து பேசிய கிளிநொச்சி மாவட்ட கைத்தொழில் சபையின் உதவிப் பணிப்பாளர் திரு எஸ்.சடாட்சரன் கிளிநொச்சி மாவட்டத்தின் உள்ளூர் உற்பத்திகளில் உள்ள வாய்ப்புகள் தொடர்பிலும் அவற்றுக்கு அரசாங்கம் வழங்கும் ஆதரவு நிலை தொடர்பிலும் கருத்து தெரிவித்ததுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் உள்ளூர் உற்பத்திகளை தாங்கி பிடிப்பதில் கிளிநொச்சி மாவட்ட பெண்களின் முக்கியத்துவத்தை வலியுத்தியிருந்தார்.

தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு வீரர்களை ஆவணப்படுத்திய லிட்டில் பேர்ட் சஞ்சிகை வெளியீடு இடம்பெற்றது. லிட்டில் பேர்ட் சஞ்சிகைக்கான வெளியீட்டு உரையை செல்வி ஜெ.கம்சாயினி வழங்க அதனை தம்பிராஜா ஜெயபாலன் வெளியீடு செய்திருந்தார். அதன் முதல் மற்றும் சிறப்பு பிரதிகளை திரு.சுப்பிரமணியம் உதயன், ஓய்வு நிலை அதிபர் பெருமாள் கணேசன், திருமதி கங்கா ஜெயபாலன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக லிட்டில் பேர்ட் சஞ்சிகையில் ஆவணப்படுத்தப்பட்ட கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மற்றும் சர்வதேச அளவில் பிரகாசித்த 15 வீரர்களை கௌரவித்து அவர்களுக்கான ஊக்கத்தொகை அன்பளிப்பை லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையம் வழங்கி வைத்தது.

தொடர்ந்து லிட்டில் பேண்ட் சஞ்சிகைகக்கான நயவுரையை வழங்கிய கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு. மோகனதாஸ் “கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு வீரர்களை ஆவணப்படுத்திய லிட்டில் பேர்ட் சஞ்சிகை என்கிற்னற முயற்சி சாலச்சிறந்தது எனவும் ஒரு பெறுமதியான வெளியீட்டை கொண்டு வந்த லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்திருந்தார். மேலும் பேசிய அவர் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும் எத்தனை பெரிய சாதனைகளை புரிந்தார்கள் என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் “விளையாட்டு வீரர்களை கூட ஆவண்ப்படுத்துவதை கிளிநொச்சியில் இங்கே தான் பார்க்கிறேன். நல்ல முயற்சி இது. கிளிநொச்சி மாவட்டம் போரினால் பாரிய பின்னடைவை அடைந்தாலும் வேகமாக வளர்ந்து வரும் புதிய தலைமுறையினர்கள் வளரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதன் முன்னேற்றத்தை திட்டமிட்டு நகர்த்த வேண்டும் என தன் கருத்தை வழங்கியிருந்தார்.

தொடர்ந்து கண்காட்சி ஏற்பாடுகள் குறித்தும் லிட்டில் பேர்ட் சஞ்சிகை தொடர்பிலும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் சார்பில் நிறுவன உதவிப் பணிப்பாளர் பாலசிங்கம் கஜீபன் உரை ஆற்றியிருந்தார். கைத்தொழில் துறையை முன்னோக்கி நகர்த்த்துதல் – கைத்தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்- சமூக முன்னேற்றத்தின் அடிப்படையில் பொருளாதார அம்சங்களின் வகிபாகம் உள்ளிட்ட பல விடயங்களை அவர் வலியுறுத்தினார்.

நிகழ்வுகளின் நிறைவில் மாணவர்களின் கைவினைப் பொருட்களும் – கிளிநொச்சி மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளும் மக்கள் பார்வைக்கு விடப்பட்டன. குறித்த கண்காட்சியில் மாணவர்களின் கைவினைப் பொருட்களை தரப்படுத்தும் செயற்பாடுகளை சுயதொழில் முயற்சியாளர் திருமதி ரவிகரன் சிந்தகை, சுப்பிரமணியம் உதயன், அன்ரனி பாலா மரியபிரசாந்தினி ஆகியோர் முன்னெடுத்திருந்தனர்.

Leave a Reply

X