லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையமானது கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக மாற்றத்துக்காகவும் – தொழில் திறன்மிக்க இளைஞர் தலைமுறையொன்றை உருவாக்குவதற்காகவும் செயற்பட்டு கொண்டிருக்கின்றது. 

புலம்பெயர் தேசத்தில் வாழும் பல தன்னார்வலர்களின் உதவியின் துணை கொண்டு லிட்டில் எய்ட் திறன் விதத்தில் மையமானது தன்னுடைய இலவச தொழில் கல்வி சேவையை வழங்கி வருகின்றது. 

இந்த நிலையில் அண்மையில் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் தொழில்கல்வி நடவடிக்கைகளுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான ஒரு தொகை பணத்தை சுவிஸ் நாட்டில் வாழும் திருமதி.ரஞ்சனா அவர்கள் அன்பளிப்பு செய்திருந்தார். திருமதி ரஞ்சனா அவர்களின் அன்பளிப்பு பணத்தை கொண்டு கணினிகளின் பயன்பாட்டுக்கான ஆறு மேசைகளும் , கணினி கற்பித்தல் நடவடிக்கைகளுக்கான சில உபகரணங்களும் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. 

கிளிநொச்சி மாவட்ட மாணவர்களின் தொழில்கல்விக்காக குறித்த அன்பளிப்பை வழங்கிய திருமதி ரஞ்சனா அவர்களுக்கு லிட்டில் எய்ட்  திறன் விருத்தி மையமானது தனது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. 

X