அண்மையில் ஏற்பட்டிருந்த டித்வா புயல் மற்றும் தொடர்ச்சியான கன மழை ஆகியன இலங்கை முழுதுமான பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிற நிலையில் இடர்மீட்பு பணியில் அரச அதிகாரிகளுடன் கூடவே தன்னார்வலர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் நமது லிட்டில் டெக் அக்கடமி சமூகத்தினரும் இடர்மீட்பு பணியில் கைகோர்த்திருந்தனர். கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் இருந்து சேகரிக்கப்பட்ட பயன்படுத்தக்கூடிய ஆடைகள் ஒரு தொகுதியை இடர் மீட்பு பணிகளுக்கான நிவாரண பொருட்களை சேகரித்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்களிடம் கையளித்திருந்தோம்.

எமக்கான ஆடைகளை கையளித்திருந்த கிளிநொச்சி வாழ் மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்..!

Leave a Reply

X