இன்றைய தினம் (13.12.2025) சனிக்கிழமை புதிய பிரிவு மாணவர்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டன….
இந்த வருடம் கல்வி பொதுத்
தராதர உயர்தரப் பரீட்சையை முடித்துக்கொண்ட மாணவர்களுக்கான லிற்றில் ரெக் அக்கடமியின் இலவச தொழில் கல்வி வகுப்புகள் ஆரம்பமாகின.
இந்த ஆண்டுக்கான பிரிவு LTA/A/2026 மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு, லிற்றில் ரெக் அக்கடமியின் பிரதான மண்டபத்தில் இன்றைய தினம் (13.12.2025) கணினி பாட ஆசிரியர் திருமதி கோகுலஜீவன் கஜானி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது லிற்றில் ரெக் அக்கடமியின் ஆசிரியர்களால் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடர்பிலும் அவற்றில் உள்ள வாய்ப்புகள் தொடர்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது.










