லிற்றில் ரெக் அக்கடமியின் வருடாந்த ஒளி விழா நிகழ்வுகள் 21.12.2025 அன்று லிற்றில் ரெக் அக்கடமியின் பணிப்பாளர் திருமதி.ஹம்சகௌரி சிவஜோதி அவர்களின் தலைமையில் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு ஆசியுரையினை கிளி/ பற்றிமா றோமன் கத்தோலிக்க பாடசாலை அதிபர் அருற்சகோதரி நிர்மலா வசந்தா அவர்கள் வழங்கினார். சிறப்புரையை புவிதரன் புத்தகசாலை, கிளிநெச்சி உரிமையாளர் திரு.மத்தியூ மதுசாந்த் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து லிற்றில் ரெக் அக்கடமியின் மாணவர்களின் ஆடல் ,பாடல் நிகழ்வுகளும் ,நத்தார் சான்டாவின் ஆடல் நிகழ்வுகளும் ,மழலைகளுக்கு சான்டா பரிசு வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிட்ட தக்கது.








































