லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் கல்வி கற்கும் நடப்பு ஆண்டுக்கான மாணவர்களால் (பிரிவு – 2023/B) இன்றைய தினம் ஆசிரியர் தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், ஆசிரியர்களின் நிகழ்வுகள் என மிகச்சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் மாணவர்களின் அன்பளிப்பாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பூங்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டதும் நினைவில் கொள்ளத்தக்கது.

மேலும் நிகழ்வில் சிறுவர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களால் மாணவர்களுக்கான அன்பளிப்பு வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த மாணவர்களுக்கான அன்பளிப்புக்கான நிதி லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஆங்கில ஆசிரியரும் – யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வருகை தரு விரிவுரையாளருமான மணி வேலுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

X