“ஒரு நூலகம் திறக்கப்படும் போது ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன.”
கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் நமது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கான ஆங்கிலபுத்தகங்கள் அன்பளிப்பு செய்யப்படுகின்ற செயற்றிட்டம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கிளி/ செல்வாநகர் அ.த.க பாடசாலை
வவு/பூவரசன்குளம் மகாவித்தியாலயம்
கிளி/விவேகானந்தா மகாவித்தியாலயம்
கிளி/பற்றிமா வித்தியாலயம்
ஆகிய பாடசாலைகளுக்கும்
கிளி/ ராகவன் முன்பள்ளி மற்றும்
KILi/ Holy Family Children’s Home சிறுவர் இல்லத்துக்கும் பெறுமதியான புத்தகங்கள் பல அன்பளிப்பு செய்யப்பட்டன.
லிட்டில் எய்ட் திறன்விருத்தி மையத்தினால் அன்பளிப்பு செய்யப்படும் இந்த ஆங்கில புத்தகங்கள் நெதர்லாந்து நாட்டை மையமாக கொண்டு இயங்கிவரும் BOOK ABROAD நிறுவனத்தினால் இலங்கையில் இடம்பெற்ற போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாணவர்களுக்காக அன்பளிப்பு செய்யப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
BOOK ABROAD நிறுவனத்தினால் இந்த அன்பளிப்பு செயற்றிட்டங்களாக சுமார் 50,000 அதிகமான புத்தகங்கள் லிட்டில் திறன் விருத்தி மையத்துக்கு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
“வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்.“