நமது தமிழ் பேசும் மாணவர்களிடம் வாசிப்பு பழக்கமும் புத்தகங்களுடனான நெருக்கமும் முற்றாக குறைந்து தொலைபேசி – தொலைக்காட்சி – சினிமாப்படங்களுடனான தொடர்பு அதிகரித்து விட்டது.

இதுவே இன்று நமது கிளிநொச்சி எதிர்கொள்ளும் சமூக சீர்கேடுகளுக்கான முதல் காரணம். இதனை நிவர்த்தி செய்யும் நோக்கோடு லிட்டில் எய்ட் நிறுவனம் மாற்றத்துக்கான முதலடியை எடுத்து வைக்கிறது.

இதற்காக பாடசாலை மாணவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் நோக்குடன் நாளை முதல் கிளிநொச்சி மாணவர்களுக்காக நமது நிறுவனத்தின் லிட்டில் நூலகம் திறக்கப்படுகிறது என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தனித்து நூலக வாசிப்பு மட்டுமன்றி மாணவர்களுக்கான சிறுவிளையாட்டுக்கள் – உளப்படுத்தல் செயற்பாடுகள் என இந்த விடுமுறை காலத்தை பயனுள்ளதாக உங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க விரும்பினால் எங்களுடன் இணைந்து மாற்றமான சமூகத்தை உருவாக்க வலிமை சேருங்கள்..!

எமது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் நூலகம் திங்கள்- செவ்வாய்- புதன் – சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் முழுமையாக மாணவர்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டிருக்கும்.

மேலும் மாணவர் வாசிப்பை ஊக்கப்படுத்தும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக இன்று நமது நிறுவனம் அமைந்துள்ள சூழலில் உள்ள வீடுகளுக்கு சென்று வாசிப்பின் தேவை தொடர்பிலும் – லிட்டில் நூலகம் தொடர்பிலும் தெளிவூட்டல் நடைபயணம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.

முடியுமானவரை தகவலை ஏனையோருக்கும் தெரியப்படுத்தி நமது முயற்சிக்கு வலுச்சேருங்கள்..!

வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்.

Leave a Reply

X