லிட்டில் எய்ட் திறன் விருத்தி மைய வளாகத்திற்கு 08.03.2024 அன்று லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் ஜேர்மன் செயற்பாட்டாளர்களான சின்னத்துரை – புஷ்பராணி தம்பதியினர் வருகை தந்திருந்தனர். இதன் போது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் செயற்பாடுகள் – அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்பன தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் திறன் விருத்தி மையத்தின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் தொடர்பிலும் நிறுவன பணிப்பாளர் ஹம்சகௌரி அவர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் சின்னத்துரை – புஷ்பராணி தம்பதியினர் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டு இருந்ததுடன் இறுதியாக முல்லைத்தீவு பகுதியில் இயங்கி வரும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தினால் பராமரிக்கப்படும் மாணவர்களுக்கான புத்தகப்பைகளையும் அன்பளிப்பு செய்திருந்தனர். குறித்த புத்தகப்பைகள் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் தையல் வகுப்பு ஆசிரியர் மற்றும் மாணவர்களின் இணைவினால் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

X