
லிற்றில் ரெக் அக்கடமியின் வருடாந்த மகளிர் தின நிகழ்வுகள் 15.03.2025 அன்று லிற்றில் ரெக் அக்கடமியின் பிரதான மண்டபத்தில் மதியம் 2.00 மணியளவில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வுகளுக்கு எழுத்தாளர் தமிழ்க்கவி அவர்கள் தலைமை தாங்க சர்வதேச விளையாட்டு வீராங்கணை திருமதி. அகிலத்திருநாயகி ஸ்ரீ
செயானந்தபவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். மேலும் குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக திருமதி அகல்யா இரவீந்திரன் (Founder and director, Natural roots, Kilinochchi) மற்றும் கிளிநொச்சி மாவட்ட HNB வங்கி முகாமையாளர் திருநாவுக்கரசு பாலஸ்காந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
விருந்தினர்கள் வரவேற்புடனும் மங்கள விளக்கேற்றலுடனும் ஆரம்பித்த குறித்த நிகழ்வில் லிற்றில் ரெக் அக்கடமியின் நம்பிக்கை நிதிய உறுப்பினர் திருமதி அருள்சோதி மோகனசுந்தரம் ஆசியுரை வழங்கி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
தலைமையுரையை வழங்கிய மூத்த எழுத்தாளர் தமிழ்க்கவி அவர்கள் பெண்களின் சுதந்திரம் மற்றும் சுய ஆளுமை எனும் கருப்பொருளை மையப்படுத்தியதான உரையை வழங்கியிருந்தார். சிறுவர் திருமணம் மற்றும் விவாகரத்தின் பின்னான பெண்களின் நிலை போன்ற இன்றைய சமகாலத்திற்கு தேவையான பல விடயங்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த மகளிர் தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த சர்வதேச விளையாட்டு வீராங்கணை திருமதி அகிலத்திருநாயகி செயானந்தபவன் தன்னுடைய கருத்துரையை வழங்கியிருந்தார்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களான கிளிநொச்சி மாவட்ட Natural roots நிறுவனத்தின் Founder and director ஆன திருமதி அகல்யா இரவீந்திரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட HNB வங்கி முகாமையாளரான திரு. திருநாவுக்கரசு பாலஸ்காந்தன் ஆகியோரின் கருத்துரைகளும் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து லிற்றில் ரெக் அக்கடமி மாணவர்களின் ஆடல், பாடல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. மேலும் Marketing officer திரு. மதுசன் நடுவராக பங்கேற்க லிற்றில் ரெக் அக்கடமியின் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த “பெண்களுக்கான உரிமைகள் மற்றும் சுதந்திரம் அவர்களால் பயன்படுத்தப்படுகிறது, அல்லது பயன்படுத்தப்படவில்லை என்ற தொனிப்பொருளிலான பட்டிமன்றமும் பலரின் பாராட்டுகளைப் பெற்றது.
நிகழ்வுகளின் இறுதியாக கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தில் பல சவால்களின் மத்தியில் சுயதொழில் முயற்சியாளராகவும், தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ள பெண் ஆளுமையான திருமதி மதிவதனா தயாபரன் நிகழ்வின் தலைவர், பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டதுடன் அவருக்கான ஊக்கத்தொகையான நிதி அன்பளிப்பு ரூபா இருபதாயிரத்தை கிளிநொச்சி மாவட்ட HNB வங்கியினர் லிற்றில் ரெக் அக்கடமியின் ஊடாக வழங்கி கௌரவித்திருந்தனர். கடந்த ஆண்டு மகளிர் தினத்தில் கிளிநொச்சி மாவட்டத்தை தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்திய கபடி வீராங்கணைகள் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Present by :Little Tech Academy
Media Team : Northern Creative Hubs
Editing : S.Keshavi
#WomensDay2025 #northerncreativehubs #LTA







































