
லிற்றில் ரெக் அக்கடமி மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பட்டறையும் மென் திறன் தொடர்பான அறிவூட்டலும் 27.03.2025 அன்று 10.00 மணியளவில் ஆரம்பித்து 3.30 மணியளவில் நிறைவுபெற்றது. இத்திட்டமானது மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தால் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் திரு.சிவக்கொழுந்து சிவரூபன் (District coordinator) மற்றும் செ.செந்தூரன் (திறன்கள் அபிவிருத்திக்கான மாவட்ட இணைப்பாளர்) ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.







