கிளிநொச்சியில் இயங்கி வரும் இலவச தொழில் கல்வி நிறுவனமான லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் நடவடிக்கைகளுக்கான நிதிஉதவிகள் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் உறவுகளின் அன்பளிப்பாக கிடைத்து வருகின்றன. இந்த நிலையில் தொடர்ச்சியாக லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் நடவடிக்கைகளுக்கான நிதியை லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வளாகத்திலேயே உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் லண்டன் வாழ் நலன்விரும்பி ஒருவரால் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்திற்கு photocopy machine மற்றும் அதனுடன் இணைந்ததான colour printer, laminator machine ஆகியனவும் அதனுடனான பொருட்களும் இன்றைய தினம் மணிவேலுப்பிள்ளை ஆசிரியர் ஊடாக அன்பளிப்பு செய்யப்பட்டது.

அன்பளிப்பு செய்த நலன்விரும்பிக்கு நமது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் சார்பாக அன்புகளையும் – நன்றிகளையும் வெளிப்படுத்திக்கொள்கின்றோம்.

Leave a Reply

X