லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த மகளிர் தின நிகழ்வுகள் எதிர்வரும் 23.03.2024 (சனிக்கிழமை) அன்று மாணவர்களின் ஏற்பாட்டிலும் திருமதி பிரியன் டிலக்சனா அவர்களின் தலைமையிலும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற உள்ளது.

குறித்த நிகழ்விற்கு கிளிநொச்சி மாவட்டத்தின் மூத்த எழுத்தாளரும் பெண் ஆளுமையுமான தமிழ்க்கவி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளவுள்ளதுடன் , கிளிநொச்சி தருமபுரம் மத்திய கல்லூரி ஆசிரியை திருமதி.சத்தியகலா கமலகாந்தன் அவர்களும் கலந்துகொள்ளவுள்ளார்.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தை தேசிய அளவில் கௌரவப் படுத்திய கிளிநொச்சி மாவட்ட கபடி வீராங்கனைகளை லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையமானது Hatton national Bank (Kilinochchi) வங்கியுடன் இணைந்து கௌரவிக்க திட்டமிட்டுள்ளது.

குறித்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட மக்களையும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களையும் அன்போடு அழைத்து நிற்கின்றோம்.

Leave a Reply

X