கிளிநொச்சியில் இயங்கி வரும் இலவச தொழில் கல்வி நிறுவனமான லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் நடவடிக்கைகளுக்கான நிதிஉதவிகள் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் உறவுகளின் அன்பளிப்பாக கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில் தொடர்ச்சியாக லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் நடவடிக்கைகளுக்கான நிதியை லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வளாகத்திலேயே உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நம்மோடு இணைந்து பயணிக்கும் லண்டன் வாழ் நலன்விரும்பி ஒருவரால் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்திற்கு மாணவர்கள் கற்றலுக்கான 06 கணினிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கணினியின் பாகங்கள் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் கணினி வன்பொருள் பாட ஆசிரியர் திரு.பொபிதரன் அவர்களால் கொள்வனவு செய்யப்பட்டு லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் கணினி கற்கும் மாணவர்களால் Assemble செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அன்பளிப்பு செய்த நலன்விரும்பிக்கு நமது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் சார்பாக அன்புகளையும் – நன்றிகளையும் வெளிப்படுத்திக்கொள்கின்றோம்.

Leave a Reply

X