லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தினுடைய பிரிவு 2024/LA/A மாணவர்களின் மாதாந்த மாணவர் மன்ற நிகழ்வுகள் இன்றைய தினம் லிட்டில்எய்ட் மையத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வுகள் மாணவர் மன்றத்தினுடைய தலைவியாகிய திருமதி.து.பிரசாந்தினி தலைமையில் நடைபெற்றது. குறித்த மாணவர் மன்ற நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராக இலக்கிய செயற்பாட்டாளர் திரு.M.மதுசன் கலந்து கொண்டிருந்ததுடன் அவர் மாணவர்களின் பட்டிமன்றத்தில் நடுவராகவும் செயற்பட்டிருந்தார். ஆடல், பாடல் , நகைச்சுவை கதைகள் என்பன இடம் பெற்றிருந்தன. குறிப்பாக மாணவர்களின் தயார்படுத்தலில் இடம்பெற்ற பட்டிமன்றம் பலருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தது.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய லிட்டில் எய்ட் திறன் விருத்தி வைத்து மையத்தின் பணிப்பாளர் ஹம்சகௌரி மாணவர்களின் தொழிற்கல்விக்கு மேலதிகமாக அவர்களுக்குள்ளே புதைந்து போய் உள்ள கலைத்திறமையை வெளிக்கொண்டுவரும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் இந்த செயற்திட்டத்தில் மாணவர்களின் பங்களிப்பு அலாதியாக இருப்பது தொடர்பில் தனது மகிழ்வினை வெளிப்படுத்தியிருந்தார். குறித்த மாணவர் மன்ற நிகழ்வுகள் திறன் விருத்தி மையத்தின் ஆசிரியர்களான திருமதி ஜெ.அனுஷியா, திருமதி ரா.பவதாரணி, செல்வி கஜானி, செல்வன் பொபிதரன், செல்வன் அபீஷ்மன் ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

X