லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த நவராத்திரி வழிபாடு மற்றும் நிகழ்வுகள் கடந்த 15.10.2023 முதல் ஆரம்பமாகின.

இதன் தொடர்ச்சியான வழிபாடுகள்நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் (18.10.2023 அன்று தொடங்கி 22-10-2023 வரை) இவற்றுக்கான ஆயத்தப்படுல்தல்கள் திறன் விருத்தி மையத்தில் கல்வி கற்கும் மாணவர்களாலும் ஆசிரியை திருமதி ம.பவதாரணி, ஆசிரியை செல்வி கஜானிகா புலேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழும் ஒழுங்கமைப்பட்டிருந்தன. கோலம், தோரணம், பூ மாலை போன்ற அலங்கார விடயங்களும் – அவல், பொங்கல், கடலை போன்ற உணவு பதார்த்தங்களும் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

X