லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் வருடாந்த ஒளி விழா நிகழ்வுகள் 18.12.2023 அன்று திறன் விருத்தி மையத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

அருட்சகோதரி இவான்ட்ரொட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளர் ஹம்சகௌரி அவர்கள் தலைமையேற்று நடாத்தினார்.

திறன் விருத்தி மையத்தின் மாணவர்களின் ஆடல் , பாடல் நிகழ்வுகளும் , லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் ஆங்கில வகுப்புக்களில் பங்கு கொள்ளும் கிளிநொச்சி முன்பள்ளி ஆசிரியர்களின் நடன மற்றும் பாடல் நிகழ்வுகளும், நத்தார் சான்டாவின் ஆடல் நிகழ்வுகளும் , மழலைகளுக்கு சான்டா பரிசு வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்து மற்றும் கிறிஸ்தவ மாணவர்கள் இணைவில் நடந்த இந்த நிகழ்வுகள் நமது நாட்டின் மத ஒற்றுமையின் ஓர் அடையாளமாக உதாரணமாக காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

X