லிட்டில் எய்ட் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் திரு.சி.கதிர் & திருமதி.யசோ கதிர் ஆகியோர்  கடந்த 20.09.2023 அன்று லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்திற்கு வருகை தந்ததுடன் மாணவர்களுடன் கற்றல் நடவடிக்கைகள் தொடர்பிலும் மாணவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர். அத்துடன் எதிர்கால தொழில் உலகிற்கு ஏற்றவாறு எவ்வாறு நகர வேண்டும்.? மற்றும் தொழில் உலகிற்கு ஏற்றவாறு மாணவர்கள் எவ்வாறு தயாராக என்பது தொடர்பிலும் மாணவர்களுக்கு அறிவுரையும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

கலந்துரையாடல் நிறைவில் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் மாணவர்களுக்கான Video editing வகுப்பறை திறப்பு விழாவும் இடம்பெற்றது.

குறித்த Video editing வகுப்புக்கான கணினிகளை திரு.நந்தகுமார் அவர்கள் அன்பளிப்பு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

X