லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பிரிவு 2023/LA/B பிரிவு மாணவர்களுக்கான Power point Presentation முன்வைப்பு பரீட்சை இன்றைய தினம் (26.01.2023)நடைபெற்றது. சமூகம் சார் விடயங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வல்லுநர்களை பற்றிய விடயங்களை மையமாக கொண்டு மாணவர்களின் இந்த Presentation முன்வைப்பு இடம்பெற்றது.

குறித்த பரீட்சையில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்ததுடன் அவர்களின் பேச்சுத்திறன்களையும் – முன்வைப்புத்திறன்களையும் சிறப்பாக அவதானிக்க முடிந்தது. இன்றைய நாளில் நடுவர்களாக கிளிநொச்சி வலயக்கல்வி பணிமனையின் கணினி கல்விக்கு பொறுப்பாக பணியாற்றும் திரு.சந்திரமோகன் , கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் திருமதி குலேபா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

X