லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் பிரிவு 2024/LA/A பிரிவு மாணவர்களுக்கான திறன் விருத்தி மேம்பாட்டு செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக தொழில்வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவம் சார்ந்த செயலமர்வு 21.02.2024 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.

ADRA நிறுவனத்தின் அனுசரணையுடனும் Youth club அமைப்பின் இணை அனுசரணையுடனும் நடைபெற்ற இந்த செயலமர்வில் வளவாளராக வவுனியா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் திருமதி ச.மதிவதனி அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் அவர்களுடன் இணைந்ததான செயலமர்வு செயற்பாடுகளை ADRA நிறுவனத்தின் தொழில்வழிகாட்டல் பிரிவு இணைப்பாளர் டனுசா அவர்களும் , அவரின் உதவியாளராக ரிதன் அவர்களும், Youth club அமைப்பின் தொழில் வழிகாட்டல் பிரிவு இணைப்பாளர் மேனகா அவர்களும் இணைந்து செயற்பட்டிருந்தனர்.

மாணவர்களுக்கான சிற்றுண்டி மற்றும் மதிய உணவு ஏற்பாடுகளை செய்திருந்த ADRA நிறுவனத்தினருக்கும் அதன் வளவாளர்களுக்கும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையமானது தன் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

Leave a Reply

X