லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் முன்னாள் பணிப்பாளரும் – சமூக செயற்பாட்டாளருமான அமரர் வயீத்தீஸ்வரன் சிவஜோதி அவர்களின் 52ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு 18.11.2023 அன்று இடம்பெற்ற வருடாந்த ஞாபகார்த்த நிகழ்வில் “யார் எவர் – கிளிநொச்சி 2023” என்ற தலைப்பிலான நூல் கிளிநொச்சி மாவட்ட ஆளுமைகளை ஆவணப்படுத்தி வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த நூல் தொடர்பான தெளிவூட்டல் மற்றும் தகவல்களை உள்ளடக்கிய கட்டுரை ஒன்றை என். செல்வராஜா (நூலியலாளர், லண்டன்) அவர்கள் எழுதியிருக்கிறார். குறித்த கட்டுரை இன்றைய (17.03.2024) வாராந்த வீரகேசரி செய்தித்தாளில் வெளியாகியுள்ளது.

குறித்த கட்டுரை மூலமாக எமக்கான அறிவுறுத்தல்களையும் – பாராட்டுக்களையும் வழங்கிய நூலியலாளர் என். செல்வராஜா அவர்களுக்கும், குறித்த கட்டுரையை பிரசுரம் செய்த வீரகேசரி குழுமத்தினருக்கும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

X