23.01.2023 முதல் கிளிநொச்சி மாணவர்களுக்காக திறந்து விடப்படுகிறது நமது லிட்டில் நூலகம்.

பாடசாலை மாணவர்களின் விடுமுறை நாட்களை மையப்படுத்தி இந்த வாசிப்பு செயற்றிட்டத்தை நாம் ஆரம்பித்தோம். திருநகர் பகுதியை சேர்ந்த மாணவர்கள் முதல் நாள் ஆரம்ப நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான விளையாட்டுக்களும் – புத்தாக்க திறனை மேம்படுத்தும் செயற்பாடுகளும் – கதை சொல்லும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

வாசிப்பினூடாக முன்னேற்றம் காணும் சமூகம் ஒன்றை உருவாக்குவோம்.

முக்கிய குறிப்பு:- திங்கள், செவ்வாய், புதன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் காலை 9 மணி தொடங்கி மதியம் 5 மணி வரை நமது நூலகம் கிளிநொச்சி மாணவர்களுக்காக திறக்கப்பட்டிருக்கும்.

Leave a Reply

X