நமது லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் “Basic computer for Kids” பாடநெறிகள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின. கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்குள் அதிகமான பாடசாலை விடுமுறை நாட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் இந்த விடுமுறை காலத்தை கிளிநொச்சி மாணவர்களின் பயனுள்ள கணினி கற்றலுக்காக வழங்கும் நோக்கோடு நம்முடைய இந்த கணினி வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளது.

இன்றைய வகுப்பில் புதிதாக 20 மாணவர்கள் இணைந்து தங்களுடைய கற்றல் நடவடிக்கைககளை எம்மோடு ஆரம்பித்துள்ளனர். வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகிற்கு ஈடுகொடுத்து ஓடுமளவிற்கு நம் மாவட்டத்து சிறுவர்களை தயார்படுத்தும் வகையில் இந்த கணினி வகுப்புகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. மேலும் கணினி வகுப்புகளிற்கு மேலதிகமாக மாணவர்களின் வாசிப்பு செயற்பாடுகள் மற்றும் விளையாட்டு செயற்பாடுகளுக்கான இடைவெளியும் வழங்கப்பட்டு இந்த வகுப்புகள் நேர்த்தியாக இன்று ஆரம்பிக்கப்பட்டது.

Leave a Reply

X