People economy forum அமைப்பினுடைய ஏற்பாட்டில் இன்றைய தினம் மாலை 6.00 மணியளவில் Impact learning – inspiring stories என்ற தொனிப்பொருளிலான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி “பிரண்ட்ஸ் இன்” விடுதியில் நடைபெற்றது. People economy forum அமைப்பின் தலைவர் திரு.க.ரெஜினோல்ட் தலைமையில் இடம்பெற்ற இன்றைய கலந்துரையாடலில் திரு. கஜேந்திர குமார் (கண்ணன்), வண.பிதா ஜோசுவா ஆகியோர் கலந்து கொண்டதுடன் கலந்துரையாடலின் சிறப்பு விருந்தினராக மொசாம்பிக் நாட்டில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான TLMM அமைப்பின் தலைவர் Mr.Pedroa Safroa கலந்து கொண்டதுடன் மொசாம்பிக் நாட்டில் சமூக மற்றும் மதக்கட்டுமானங்களின் நிலை – மத நல்லிணக்கம் – பல் மொழி பற்றிய புரிதல் போன்றவற்றை பற்றியும் அவர்களின் தன்னார்வ தொண்டு பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காவேரி கலாமன்றத்தின் செயற்பாடுகள் குறித்து அவர்களால் சமூக மட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. இன்றைய கலந்துரையாடலில் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் சமூக மட்டத்திலான செயற்பாடுகள் குறித்தும் – அது சமூக மட்டத்தில் ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் பற்றியும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் உதவிப் பணிப்பாளர் கஜீபன் மற்றும் கணிணி பாட ஆசிரியர் பொபிதரன் ஆகியோரால் விளக்கமளிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடலில் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் செயற்பாடுகள் பற்றி பேசிய வணபிதா ஜோசுவா அவர்கள் ” கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய அமைப்புக்கள் கூட செய்யாத செயற்பாடுகளை லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையம் செயற்படுத்தி வருகிறது. உண்மையிலேயே மாணவர்களின் பாடசாலை கல்வியை அடுத்து அவர்களை சமூகத்திற்காக ஆக்கபூர்வமான வகையில் தொழில்துறை மற்றும் திறன் சார்ந்து தயார்படுத்துகின்றது லிட்டில் எய்ட். அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தின் சமூக மாற்றத்திலும் – முன்னேற்றத்திலும் முக்கியமான பங்களிப்பை லிட்டில் எய்ட் சமூகத்தினர் செய்து வருகின்றனர்” என தெரிவித்தார். நிகழ்வின் இறுதியில் Mr.Pedroa Safroa அவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் கலந்துரையாடல் முடிவுக்கு வந்தது.

Leave a Reply

X