International Medical Health Organization-UK ஆனது லிற்றில் ரெக் அக்கடமியின் ஊடாக Smart Class வகுப்புக்களை கிளிநொச்சியில் ஒழுங்கமைத்து செயற்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

குறித்த Smart Class வகுப்புக்களின் ஆரம்ப நிகழ்வு லிட்டில் டெக் அக்கடமியில் 19.01.2025 அன்று இடம்பெற்றது. உயர்தர கணித மற்றும் விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான Smart வகுப்புகளுக்கான மாணவர்கள் இணைந்திருந்ததுடன் : அவர்களின் பின்னூட்டங்களும் திருப்தியானதாக அமைந்திருந்தது.தொடர்ச்சியான நேர அட்டவணை மூலமாக பல பிரிவுனருக்குமான வகுப்புக்கள் ஆரம்பமாகவுள்ளதால் கற்க ஆர்வமுள்ள மாணவர்கள் எம்மோடு இணைந்து கொள்ளுங்கள்..! தரம் 06 தொடக்கம் உயர்தரம் வரையிலான மாணவர்களுக்கான இலகுவழி விளக்கங்களுடன் கூடிய இணையவழி வகுப்புக்கள் இலவசமாக இந்த Smart Class project மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

X