கிளிநொச்சி மாணவர்களுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான இலவசமான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு திருநகரில் உள்ள லிட்டில் எய்ட் நிறுவனத்தின் பிரதான வளாகத்தில் 26.02.2023 அன்று நடைபெற்றது.

பல மாணவர்கள் பங்குபற்றியிருந்த இந்த நிகழ்வில் தொழில் வழிகாட்டல்களுடன் இணைந்ததாக தொழில் உலகிற்கு ஏற்றதான சுயவிபரக்கோவை தயாரிக்கும் முறை , வங்கி தொழில் ஒன்றுக்கு தேவையான தகைமைகள் , பல்கலைக்கழக தெரிவுக்கு தேவையான தகைமைகள் – கற்றல் வாய்ப்புகள் முதலான பல விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வளவாளர்களாக GERMAN TEC, NAITA, VTA, UKI , மாகாண விவசாய பயிற்சிக்கல்லூரி ஆகிய தொழில்கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன் கிளிநொச்சி மாவட்ட தொழில் அலகு பிரிவின் அதிகாரியும், கரைச்சி பிரதேச செயலக தொழில்வழிகாட்டல் அலகு அதிகாரி விஜிதா அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதே வேளை மாணவர்களுக்கான சுயவிபரக்கோவை தயாரிப்பது தொடர்பான வழிகாட்டுதலை வழங்க மனிதம் அமைப்பிடைய உருவாக்குநர்களுள் ஒருவரான நிவேதா சிவராஜா கலந்து கொண்டிருந்தததுடன் – பல்கலைகழக கற்றல் – கல்வி வாய்ப்புக்கள் தொடர்பில் விளக்கமளிக்க குருகுலம் நிறுவன உருவாக்குநர் த.துசாந்தன் அவர்களும் கலந்து கொணட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் ஹட்டன் நசனல் வங்கியின் பிரதிநிதிகளும் எம்முடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

X