கிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலகம் கரைச்சியினால் நடத்தப்பட்ட தொழில் வழிகாட்டல் கருத்தரங்கானது 28/ 4/ 2026 அன்று எமது லிற்றில் ரெக் அக்கடமியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. வளவாளராக திருமதி விஜயராகவன் விஜிதா ( திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் கரைச்சி) கலந்து கொண்டார்.
இதில் மாணவர்களுக்கான NVQ சான்றிதழ் பெறுவது தொடர்பாகவும், முறை சார் முறைசாரா கற்கைநெறிகள் தொடர்பான விடயங்களையும், பல்கலைக்கழகங்கள் தெரிவுகள் தொடர்பாகவும் மேலும் இளைஞர்கள் மத்தியில் பொதுவாக ஏற்படும் பிரச்சனைகளுக்கான உளவியல் சார் வழிகாட்டலும் வழங்கப்பட்டது. அத்துடன் சமுர்த்தி மற்றும் நலன்புரி பெறும் குடும்பங்களுக்கான நன்மைகள் தொடர்பான வழிகாட்டலும் வளவாளரினால் வழங்கப்பட்டது. இக்கருத்தரங்கிற்கான அனுசரணையினை சமுர்த்தி திணைக்களம் வழங்கி வருகின்றது.

Leave a Reply

X