லிற்றில் ரெக் அக்கடமி மாணவர்களுக்கான மாணவர் மன்றம் 09.06.2026 அன்று 9.30 மணியளவில் லிற்றில் ரெக் அக்கடமியின் கல்வி பண்பாட்டு மன்ற மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த இந் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக ஓய்வு நிலை அதிபர் திரு. கஸ்பர் மதுரநாயகம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினர் உரையை ஆற்றியிருந்தார். தொடர்ந்து மாணவர்களுக்கான ஆசிரியரை மகாதேவா சுவாமிகள் இல்லம் ஆண்கள் பிரிவின் முகாமையாளர் திரு .தர்மாகுலசிங்கம் சிவானந்தன் அவர்கள் வழங்கிவைத்தார். மேலும் ஆசிரிய ஆலோசகர் மற்றும் மகாதேவா சிறுவர்கள் இல்லம் கல்வி பொறுப்பாளரான

திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கருத்துரைகளை வழங்கியிருந்தமை

குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மாணவர்களின் ஆடல் பாடல் நிகழ்வுகளும் சிறப்பாக இடம் பெற்று நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவடைந்தன.

Leave a Reply

X